சர்ச்சைக்குள்ளான இளையராஜா 75: மொத்த செலவு எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி!

சர்ச்சைக்குள்ளான இளையராஜா 75: மொத்த செலவு எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி!

இளையராஜா நிகழ்ச்சிக்குச் செய்யப்பட்ட செலவு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:  இளையராஜா நிகழ்ச்சிக்குச் செய்யப்பட்ட செலவு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75′ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெறவுள்ள நிலையில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான இளையராஜா 75: மொத்த செலவு எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி!

இது குறித்து தயாரிப்பாளர் ஜெ. சதீஷ் குமார் தாக்கல் செய்த மனுவில், ‘இளையராஜா 75′ இசை நிகழ்ச்சி நடத்த ரூ. 7 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் எனக்கூறி சங்கத்தின் பணம் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. எனவே, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் சங்க வங்கிக் கணக்கில் 7 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை நடத்தத் தடை விதிக்க வேண்டும்’ என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான இளையராஜா 75: மொத்த செலவு எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி!

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இளையராஜா பாராட்டு விழாவுக்குச் செய்த செலவு எவ்வளவு?  இளையராஜா- 75 என்ற பாராட்டு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? என்று சரமாரியாக  கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு என்கிற விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று  தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜா நிகழ்ச்சியின் மேடை அலங்காரத்திற்கு மட்டும் சங்கத்திலிருந்து 3 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டினார்.
 

Share this story