சிம்புவுக்கு ஜோடியாகும் பிக் பாஸின் குட்டி ராட்சசி?

சிம்புவுக்கு ஜோடியாகும் பிக் பாஸின் குட்டி ராட்சசி?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா, சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக சென்ராயன் குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா, சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக சென்ராயன் குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிம்புவுக்கு ஜோடியாகும் பிக் பாஸின் குட்டி ராட்சசி?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில், இறுதிப்போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேறிய சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சென்ராயன், பகீர் குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாகும் பிக் பாஸின் குட்டி ராட்சசி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சென்ராயன், சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், புத்தகத்தையும் பரிசாக பெற்றார். இநிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த சென்ராயன், ஐஸ்வர்யா உனக்கு வெளியே அதிக வரவேற்பு இருப்பதாக கூறி ஐஸுக்கே ஐஸ் வைத்தார். இதில் ஒரு படி மேலே சென்று, நீ வெளியே வந்ததும், சிம்பு நடிக்கவுள்ள புதுப்படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் உனக்கு காத்திருப்பதாக சென்ராயன் கூறினார்.

சிம்புவுக்கு ஜோடியாகும் பிக் பாஸின் குட்டி ராட்சசி?

பிக் பாஸின் கரிசனத்தால் இறுதிப்போட்டி வரை வந்துள்ள ஐஸ்வர்யாவுக்கு, டைட்டிலை வெல்லும் அளவிற்கு பிக் பாஸிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக கருத்து நிலவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால், பலமுறை எவிக்‌ஷனுக்கு தள்ளப்பட்டும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார்.

தற்போது ஐஸ்வர்யாவை காப்பாற்றவும், டைட்டில் வின்னராக்கவும் பிக் பாஸ் சிம்பு பெயரை வைத்து, அவரது ரசிகர்களின் வாக்குகளை பெற திட்டமிட்டிருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
 

Share this story