சிம்பு ரசிகர்களின் அடாவடி: அஜித், ரஜினி பேனர்களை கிழிக்க போவதாக மிரட்டல்!

சிம்பு ரசிகர்களின் அடாவடி: அஜித், ரஜினி பேனர்களை கிழிக்க போவதாக மிரட்டல்!

நடிகர் சிம்பு படத்திற்குப் பேனர் அடித்து தர மறுத்தவரை மிரட்டிய ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள ரஜினி மற்றும் அஜீத் பட பேனர்களை கிழிக்கப்போவதாக எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

வேலூர்: நடிகர் சிம்பு படத்திற்குப் பேனர் அடித்து தர மறுத்தவரை மிரட்டிய ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள ரஜினி மற்றும் அஜீத் பட பேனர்களை கிழிக்கப்போவதாக எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதற்காக சிம்புவின் படத்திற்கு பேனர் அடிக்க வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவராக இருக்கும்  மச்சி மதன் சென்றுள்ளார்.

அப்போது சிம்புவின் படத்திற்கு பேனர் அடித்து தரமாட்டேன் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் கடையில் புகுந்து தகராறு செய்து, அதை தனது கூட்டாளி மூலம் படம் பிடித்து வீடியோவாக மதன் வெளியிட்டுள்ளார். 

இதுமட்டுமல்லாமல் சிம்புவின் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் உள்ள ரஜினியின் பேட்ட , அஜீத்தின் விஸ்வாசம் பட பேனர்களை கிழிக்க போவதாகவும் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில்  வைரலாகி வருகின்றது.

Share this story