சிறப்புக்கட்டுரை: ஆண் மனதை அழிக்க வந்த சாபம்: ஹேப்பி பர்த்டே நயன்தாரா

சிறப்புக்கட்டுரை: ஆண் மனதை அழிக்க வந்த சாபம்: ஹேப்பி பர்த்டே நயன்தாரா

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமா வரலாற்றில் வெகு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கென ஓர் நிரந்தர இடத்தை தக்கவைத்துள்ளனர். அதில் நயன்தாரா குறிப்பிடத்தக்கவர்.

– அருண் பாண்டியன்

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமா வரலாற்றில் வெகு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கென ஓர் நிரந்தர இடத்தை தக்கவைத்துள்ளனர். அதில் நயன்தாரா குறிப்பிடத்தக்கவர். 2005-ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சரத்குமார் போன்ற முதிர்ச்சியான நடிகருடன் நடித்த நயன்தாரா தமிழ் சினிமாவில் காணாமல் போய்விடுவார் என பலரும் நினைத்தனர். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவு வளர்ந்து நிற்கிறார்.

நயன்தாராவின் திரைப்பயணத்தில் அவருக்கு முதல் திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. இதில் கிளாமராக நடித்ததன் மூலமே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். அவரை கமர்சியல் சினிமாவில் வேறு தளத்துக்கு நகர்த்திய படம் ‘ராஜா ராணி’ என்று சொன்னால் மிகையாகாது. அட்லீ இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன்பிறகு நயன்தாராவின் திரைப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது.

சிறப்புக்கட்டுரை: ஆண் மனதை அழிக்க வந்த சாபம்: ஹேப்பி பர்த்டே நயன்தாரா

நயன்தாராவின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகள் தேடிவரத் துவங்கின. அவர் நடித்த ‘மாயா’ திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை சந்திக்க, டோரா, அறம், கோலமாவு கோகிலா என அவரது சோலோ பட்டியல் தொடர்கிறது. இதில் ‘அறம்’ அவரின் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம், கலெக்டருக்கே உரிய கம்பீரத்துடன் அதிகாரவர்க்கத்திடம் பேசும் போதும், ஏழை மக்களின் மீது அக்கறையாய் பேசும்போதும் பார்வையாளர்களுக்கு சிலிர்க்காமல் இல்லை. கிட்டத்தட்ட விஜயசாந்தி காலத்துக்கு பிறகு ஒரு நடிகையை நம்பி தொடர்ந்து படங்கள் எடுக்கப்படுகிறது என்றால் அது நயன்தாராவுக்கு மட்டுமே. 

சிறப்புக்கட்டுரை: ஆண் மனதை அழிக்க வந்த சாபம்: ஹேப்பி பர்த்டே நயன்தாரா

இன்று அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நீடித்திருக்கும் நயன்தாராவை சர்ச்சைகள் சூழாமல் இல்லை. ஆனால் அவை தொழில் சார்ந்ததாக இல்லாமல் அவர் சொந்த வாழ்க்கை சார்ந்ததாக இருந்தது. அவர் காதல் வாழ்க்கையை எள்ளி நகையாடிய சமூகத்தின் முன்பு சாதித்து காட்டியிருக்கிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா.

Share this story