“சீமான் சார்…என்னை ஞாபகமிருக்கா?” – வறுத்தெடுத்த நடிகை விஜயலட்சுமி…காரணம் இதுதான்: வீடியோ உள்ளே!

“சீமான் சார்…என்னை ஞாபகமிருக்கா?” – வறுத்தெடுத்த நடிகை விஜயலட்சுமி…காரணம் இதுதான்: வீடியோ உள்ளே!

தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த சீமானை நடிகை விஜயலட்சுமி திட்டித் தீர்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை: தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த சீமானை நடிகை விஜயலட்சுமி திட்டித் தீர்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை விஜயலட்சுமி. இவர் சீமான் இயக்கிய ‘வாழ்த்துக்கள்’ படத்திலும் நடித்தார். 3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி பரபரப்பு புகார் கூறியிருந்தார். மேலும் சீமானுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோக்களையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த விவகாரம் நாள்போக்கில் மறைந்து போய் விட்டது.

இந்த நிலையில், தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது நெற்றியில் விபூதி பட்டை பூசியதை பார்த்து தன்னை கிண்டல் செய்ததாக விஜயலட்சுமி சீமானை திட்டியுள்ளார். ஆனால், தற்போது சீமானே நெற்றியில் விபூதி பட்டை பூசி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருப்பது எந்த வகையில் சரி என்று சீமானிடம் அவர் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story