சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’!

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’!

சூப்பர் சிங்கர் 6வது சீசன் டைட்டில் வின்னரான செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

சென்னை: சூப்பர் சிங்கர் 6வது சீசன் டைட்டில் வின்னரான செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு பின் ‘சீமராஜா’, ‘சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ள செந்தில் கணேஷ் தற்போது ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதை கவர்ந்த செந்தில் கணேஷ் சமீபத்தில் பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’!

இந்த பாடலை எழுதிய செல்ல தங்கையா என்பவர் இயக்கத்தில் ‘கரிமுகன்’ படத்தில் செந்தில் கணேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘திருடு போகாத மனசு’ என்ற திரைப்படம் வெளியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கமர்ஷியல் காமெடி ஜானரில் செந்தில் கணேஷ் நடிக்கும் ‘கரிமுகன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த காயத்ரி என்ற நடிகை நடித்துள்ளார். எலக்ட்ரீஷனாக செந்தில் கணேஷ் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம், தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

Share this story