சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் ஐஸ்வர்யா ராய்?

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் ஐஸ்வர்யா ராய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘2.0’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘2.0’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படத்தில் ‘எந்திரன்’ பட நாயகியும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் ஐஸ்வர்யா ராய்?

கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். அந்த படத்தின் சில கனெக்‌ஷன் ‘2.0’ படத்தில் இருப்பதால், இதில் டாக்டர் வசீகரனுடனான சீனில் ஐஸ்வர்யா ராய் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவார் என பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது குறித்து படக்குழு தரப்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

’2.0’ படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த ஓராண்டிற்கு முன்பே நிறைவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவ.29ம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story