" தல ரசிகர்களையே கெஞ்ச வச்சிடீங்களேப்பா" போஸ்டர் அடித்து வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்!

" தல ரசிகர்களையே கெஞ்ச வச்சிடீங்களேப்பா" போஸ்டர் அடித்து வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்!

இருப்பினும் பெரிய அளவில் காயம் இல்லாததால் சென்னையில் நடந்த படப்பிடிப்பு முழுவதையும் அஜித் முடித்து கொடுத்துள்ளார் போன்ற செய்திகள் வெளியாகின.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.  தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

 

ttn

இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.  இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

 

ttn

வலிமை படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து  சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் பெரிய அளவில் காயம் இல்லாததால்  சென்னையில் நடந்த படப்பிடிப்பு முழுவதையும் அஜித் முடித்து கொடுத்துள்ளார் போன்ற செய்திகள் வெளியாகின. 

 

ttn

இருப்பினும் விஜய், சூர்யா படங்கள் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆனால்  அஜித்தின் வலிமை குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் தல ரசிகர்கள்  அதிருப்தியில் உள்ளனர். 

இந்நிலையில் சிவகாசியில் அஜித் ரசிகர்கள் சிலர் “WE ASK WITH HUMANITY  PLS_GIVE_VALIMAI_UPDATE” என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட சிலர் அடேய் அஜித் ரசிகர்களையே கெஞ்ச வச்சிடீங்களேடா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

Share this story