தளபதி 65' படத்தின் இயக்குநர் இவர்தானாம்…அப்போ செண்டிமெண்ட் தூக்கலா இருக்குமே!?

தளபதி 65' படத்தின் இயக்குநர் இவர்தானாம்…அப்போ செண்டிமெண்ட் தூக்கலா இருக்குமே!?

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் அடுத்த படமான 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் இணையத்தில் செய்தி வெளியாகியது. 

 

ttn

இயக்குநர்கள்  ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ இவர்களுள்  ஒருவர் இப்படத்தை இயக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் ஒருபுறமோ  விஜய் புது இயக்குநர்  ஒருவருடன் இணைய இருப்பதாகக் பேசப்பட்டது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

தளபதி 65' படத்தின் இயக்குநர் இவர்தானாம்…அப்போ செண்டிமெண்ட் தூக்கலா இருக்குமே!?

இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பாண்டியராஜ் முதன்முறையாக விஜய்யுடன் இணைய உள்ளதாக செய்திகள் தற்போது உலா வருகிறது. 

Share this story