தளபதி 65 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவில்லை! மாஸ்டர் இணை தயாரிப்பாளர் விளக்கம்

தளபதி 65 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவில்லை! மாஸ்டர் இணை தயாரிப்பாளர் விளக்கம்

தளபதி 65 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவிருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

தளபதி 65 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவில்லை! மாஸ்டர் இணை தயாரிப்பாளர் விளக்கம்

இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இதனையடுத்து தளபதி 65 என்ற ஹேஷ்டேக் இணையத்தை அதகளப்படுத்தியது. மேலும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும் இந்த தகவலை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் தனது வாட்ஸ் அப்பில் ஒருவருடன் சாட் செய்ததாகவும் ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தளபதி விஜய், சங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத்தின் கூட்டணியில் தளபதி 65 உருவாக இருப்பதாகவும் இருந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஜெகதீஷ், “இது முற்றிலும் போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம். இதில் உண்மை இல்லை. இதனை நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார். 

Share this story