நானும் பாதிக்கப்பட்டேன்: மீ டூ அனுபவத்தை பகிரும் சைஃப் அலிகான்!

நானும் பாதிக்கப்பட்டேன்: மீ டூ அனுபவத்தை பகிரும் சைஃப் அலிகான்!

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், 25 ஆண்டுகளுக்கு முன் தானும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், 25 ஆண்டுகளுக்கு முன் தானும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் திரைத்துறை, பத்திரிகைத்துறை, அரசியல் என பல்வேறு துறைகளிலும் மீ டூ சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், 25 ஆண்டுகளுக்கு முன் தானும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் பாதிக்கப்பட்டேன்: மீ டூ அனுபவத்தை பகிரும் சைஃப் அலிகான்!

இது குறித்து பேசிய சைஃப் அலிகான், ‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக துணை நிற்கிறேன். அவர்கள் கடந்து வந்த கொடூரமான பாதையை என்னால் உணர முடிகிறது. எனக்கு நேர்ந்த துன்புறுத்தலை இப்போது நினைத்தால் கூட கோபமாக இருக்கிறது. சிலருக்கு இந்த வலி புரியாது. பிறரின் வலியை புரிந்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று. பாலியல் புகார்களின் உண்மை தன்மையை அறிந்து தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த சைஃப் அலிகான், அது பற்றி முழுமையாக தெரியவில்லை. இதுபோன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் நபர்களுடன் பணிபுரிய மாட்டேன் எனவும் சைஃப் அலிகான் தெரிவித்துள்ளார்.

Share this story