படமாகும் காஷ்மீர் விவகாரம்… 2 கோடி சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால்!?

படமாகும் காஷ்மீர் விவகாரம்… 2 கோடி சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால்!?

சித்ரம், நுவ் நேனு, ஜெயம், நிஜாம் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்த தேஜா, நேனே ராஜு நேனே மந்திரி மூலம் மறுபடியும் ஒரு ரீஎன்ட்ரி கொடுத்தார். இதில் பாகுபலி நட்சத்திரம் ராணா தகுபதி மற்றும் காஜல் அகர்வால் நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக அமைந்தது

 

சித்ரம், நுவ் நேனு, ஜெயம், நிஜாம் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்த தேஜா, நேனே ராஜு நேனே மந்திரி மூலம் மறுபடியும் ஒரு ரீஎன்ட்ரி கொடுத்தார். இதில் பாகுபலி நட்சத்திரம் ராணா தகுபதி மற்றும் காஜல் அகர்வால் நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக அமைந்தது.

படமாகும் காஷ்மீர் விவகாரம்… 2 கோடி சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால்!?

ஆனால் இதற்கு அடுத்த படமான சீதா வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்

தேஜா கடந்த ஆண்டு, ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக 370 வது பிரிவை ரத்து செய்தது குறித்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்தது. ஒரு பாலிவுட் ஹீரோவை வைத்து article 370 ஐ உருவாக்க விரும்பினார், ஆனால் இப்போது அதை தெலுங்கில் எடுக்க முடிவு செய்து ராணா தகுபதியை வில்லனாக  நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை நடிக்க வைக்க இருப்பதாகவும் அதற்காக அவருக்கு 2 கோடி வரையில் ஊதியம் தரப்பட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படமாகும் காஷ்மீர் விவகாரம்… 2 கோடி சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால்!?

இந்த படத்திற்கு காஜல் அகர்வால் தேஜாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளாரா என்பது தெரியவில்லை. காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Share this story