படுக்கைறையில் இருந்த கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா: வைரல் வீடியோ!

படுக்கைறையில் இருந்த கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா: வைரல் வீடியோ!

நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கரம் பிடித்தார்.

படுக்கைறையில் இருந்த கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா: வைரல் வீடியோ!

ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ‘உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமணம் முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிப்பதில் முனைப்புக் காட்டி வந்த  பிரியங்கா,தனது காதல் கணவருடனும் பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் தலை தீபாவளி கொண்டாடிய இந்த ஜோடி வெகு விரைவில் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடவுள்ளது.

இந்நிலையில் கணவருக்கு முதலாமாண்டு  திருமண நாளுக்காக  ஜெர்மன் ஷெப்பர்ட்  நாய் ஒன்றை சர்ப்ரைஸாக கொடுத்துள்ளார் பிரியங்கா . ஜினோ  என்ற பெயர் கொண்ட அந்த நாயை கணவர் நிக் படுக்கையறையில் கொண்டுசென்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

Share this story