பண திமிரா உங்களுக்கு? நடிகை பிரியங்கா சோப்ராவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

பண திமிரா உங்களுக்கு? நடிகை பிரியங்கா சோப்ராவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டார்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை  திருமணம் செய்து கொண்டார்.

பண திமிரா உங்களுக்கு? நடிகை பிரியங்கா சோப்ராவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

திருமணம் முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிப்பதில் முனைப்புக் காட்டி வந்த  பிரியங்கா விடுமுறை நாட்களில்  கணவர் ஜோனாஸுடன் வெளிநாடுகளுக்கும் அடிக்கடி ட்ரிப்  அடிப்பது மட்டுமல்லாமல், அதற்கான புகைப்படங்களையும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் இந்த இளம் ஜோடி தல தீபாவளியை மெக்சிகோவில் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைராலனது. 

இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா ஐஸ்கிரீமின் புகைப்படத்தைத் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ஐஸ்கிரீமை சுற்றி 500 ரூபாய் நோட்டுகள்  அலங்கரிக்கப்பட்டு  இருந்தது. இதைக் கண்ட நெட்டிசன்கள், உங்கள் பணத்திமிரை காட்டுகிறீர்களா என்று கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். 
 

 

Share this story