பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர்தான்! அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இதோ

பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர்தான்! அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இதோ

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை ரித்விகா தட்டிச் சென்றுள்ளார்.

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை ரித்விகா தட்டிச் சென்றுள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 106 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் இன்று ஒளிபரப்பானது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 

இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் இறுதிப்போட்டியில் இருந்தனர். இவர்களில் ஐஸ்வர்யாவிற்கும், ரித்திகாவிற்கும் இறுதி நேரத்தில் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், 1 கோடியே 60 லட்சம் வாக்குகளை பெற்று பிக்பாஸ் 2-வின் டைட்டிலை ரித்விகா தட்டிச்சென்றுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே அமைதியாக, எதிலும் பெரிதாக பங்குபெறாமல் இருந்ததாக கருதப்பட்ட ரித்விகா, பின்னர் இது தான் கேம் என்பதை புரிந்து கொண்டு நிதானமாக விளையாடி மக்கள் மனதை வென்றிருக்கிறார்.

இவர் பிக்பாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் கலைத்துறையினர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
  

Share this story