பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தைத் தட்டிச் சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தைத் தட்டிச் சென்ற போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி தருணத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் இறுதிப்போட்டியில் உள்ளனர். 

பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே போலித்தனமும், நடிப்பும் போட்டியாளர்களிடம் இருப்பதாக மக்கள் மனதில் கருத்துக்கள் இருந்தன. பின்னர் அது சற்று மாறி, இந்த சீசனின் போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை மக்கள் புரிந்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் தங்களது ஆதரவினை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளித்து வந்தனர்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நடிகை ரித்விகா பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விஷ பாட்டில் என்றழைக்கப்படும் கண்ணழகி ஜனனி தட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், ‘உலக அழகி’ போட்டிகளில், போட்டியாளர்களின் திறமை மற்றும் மன உறுதியை சோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். அதில் மனதை கவரும் வகையில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு மகுடம் சூட்டப்படும். அதே டாஸ்க்கை பிக் பாஸும் கையாண்டிருப்பதாக தெரிகிறது. கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு மக்களை கவரும் விதத்தில் பதிலளித்து முதலிடத்தைப் பிடித்தவர் ரித்விகா. இரண்டாவதாக யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ஜனனி அசத்தலான பதிலைச் சொல்லி இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் 2 ரன்னர் யார் தெரியுமா?

வாக்குகளில் ரித்விகா முந்திக் கொண்டாலும், திள்ளுமுள்ளு செய்து ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது இடத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்று பிக் பாஸ் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் போட்டு வைத்த திட்டம் இப்படி பாழாய் போய்விட்டதாக நெட்டிசன்கள் பிக் பாஸுக்கு பரிதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கும், ரன்னரான ஜனனிக்கும் வாழ்த்துக்கள்.

 

 

Share this story