பிரியங்கா-நிக் ஜோனஸ் திருமணம்: மும்பையில் குவியும் ஹாலிவுட் ஸ்டார்ஸ்!

பிரியங்கா-நிக் ஜோனஸ் திருமணம்: மும்பையில் குவியும் ஹாலிவுட் ஸ்டார்ஸ்!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர்.

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்யவிருக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரை வரும் டிசம்பர் 2ம் தேதி ஜோத்பூரில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

பிரியங்கா-நிக் ஜோனஸ் திருமணம்: மும்பையில் குவியும் ஹாலிவுட் ஸ்டார்ஸ்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் உலக புகழ் மிக்க ஜோடிகளுக்கு டெஸ்டினேஷன் வெட்டிங் நடைபெறவுள்ளது. திருமணத்தையொட்டி இந்த அரண்மையில் உள்ள 347 அறைகளும் 2 நாட்களுக்கு புக் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஒரு நாள் வாடகை ரூ.48 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இவர்களது திருமணம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெவரிலி ஹில்ஸ் நீதிமன்றத்தில் திருமண உரிமம் சான்றிதழை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நிக் ஜோனஸின் சகோதரரும், பாப் பாடகரும், நடிகருமான ஜோ ஜோனஸ் மற்றும் அவரது வருங்கால மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னர் ஆகியோர் மும்பை வந்துள்ளனர். இவர்களுடன் மும்பையில் உள்ள ரெஸ்டாரண்டில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது பாலிவுட் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்துள்ளனர்.

பிரியங்கா-நிக் ஜோனஸ் திருமணம்: மும்பையில் குவியும் ஹாலிவுட் ஸ்டார்ஸ்!

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பலர் இந்தியா வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story