விந்து தானம் தொழில் அல்ல… பொழுதுபோக்கு! தாராள பிரபுவின் விமர்சனம்

விந்து தானம் தொழில் அல்ல… பொழுதுபோக்கு! தாராள பிரபுவின் விமர்சனம்

இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடித்து வெற்றி பெற்ற,கொஞ்சம் விவகாரமான படம் இது. படத்தின் நாயக பிரபு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்து தானம் செய்கிற ஆள்.அது அவனாகத் தேர்ந்தெடுத்த தொழில் இல்லை,அவன்வேலை பார்க்கும் குழந்தை இன்மை சிகிச்சை மருத்துவமனை டாக்டர் விவேக்தான் பிரபுவை இந்த சிக்கலில் கோர்த்து விடுகிறார்.முதலில் மறுத்தாலும் சந்தர்ப்ப சூழல்கள் அவனைத் தலையாட்ட வைக்கின்றன.எல்லாம் நன்றாகப் போய்கொண்டு இருக்கும் போது நிதி ( தன்யா) என்கிற பெண்ணைச் சந்தித்து அவள் மேல் காதல் கொள்கிறான்.அதுவரை கால்பந்து,அம்மா,பாட்டி,டாக்டர் விவேக் என்று போய்கொண்டு இருந்த பிரபுவின் வாழ்க்கை சிக்கலாகிறது.அதை எப்படி சிக்கெடுக்கிறான் என்பதுதான் தாராளப் பிரபு படம்.இப்படி ஒரு கதையை தமிழில் விரசமில்லாமல் சுவாரசியமாகச் சொல்ல ஒரு திறமை வேண்டும்.

Image result for dharala prabhu

அந்த விசயத்தில் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.அடுத்தது ஹரீஷ் கல்யாண். இந்தியில் ஆகாஷ் குரானா செய்த வேடம் இவருக்கு மிக இயல்பாக பொருந்துகிறது. பர்ஃபெக்ட் பக்கத்து வீட்டுப் பையன்.ஆனால்,படத்தில் பெயரைத் தட்டிக்கொண்டு போவது விவேக்தான்.டாக்டர் கண்ணதாசனாக வரும் விவேக் தனது பஞ்ச்களை பறக்க விட்டு முதலிடம் பிடிக்கிறார்.அடுத்து இயற்கை வைத்திய ஸ்பெசலிஸ்டாக வரும் பாட்டி சச்சு அவரும் தன் பங்குக்கு தியேட்டரைக் கலகல்ப்பாக்குகிறார்.அடுத்து பாராட்ட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.

இரண்டாவது பாதியில் வரும் சில மந்தமான காட்சிகளைக்கூட இசை அமைப்பாளரின் உதவி இல்லாமல் காப்பாற்றுவது செல்வகுமார்தான்.மொத்தத்தில் இதுவரை சொல்லப்படாத ஏரியாவில் வந்திருக்கும் புதியபடம்.இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து,பிக்பாசில் அறிமுகமான ஹரீஷ் கல்யாண் இருவருக்குமே இது முக்கியமான படம்.

Share this story