‘மறுவார்த்தை பேசாதே’ பாடலைப் பாடி அசத்தும் பிரியாணி மான்ஸ்டர்!

‘மறுவார்த்தை பேசாதே’ பாடலைப் பாடி அசத்தும் பிரியாணி மான்ஸ்டர்!

பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் மறுவார்த்தை பேசாதே பாடலை பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மிதிலா பால்கர் ‘லிட்டில் திங்ஸ்’ என்ற வெப் சீரிஸ் மூலமாக பிரபலமானார். அதில் அவருக்கு பிரியாணி மான்ஸ்டர் என்ற செல்லப் பெயருண்டு. எனவே ரசிகர்களும் அவரை பிரியாணி மான்ஸ்டர் என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அந்த வெப் சீரிஸ் மூலமாக இந்தியா முழுக்க ரசிகர்களைப் பெற்றுள்ளார் மிதிலா.

‘மறுவார்த்தை பேசாதே’ பாடலைப் பாடி அசத்தும் பிரியாணி மான்ஸ்டர்!

மிதிலா பால்கர் 2018 ஆம் ஆண்டு வெளியான கார்வான் என்ற இந்தி படத்தில் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இர்பான் கான் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் நடித்திருந்தனர். தற்போது லிட்டில் திங்ஸ் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது மிதிலா பால்கர் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் இடம் பெற்ற ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலை கிட்டார் வாசித்துக் கொண்டே பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story