சமந்தாவின் ‘தி ஃபேமிலிமேன் 2’தடையா ? தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சமந்தாவின் ‘தி ஃபேமிலிமேன் 2’தடையா ?   தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சமந்தா நடிக்கும் ’தி ஃபேமிலிமேன் 2’வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

‘தி ஃபேமிலிமேன்’ முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. அமேசான் பிரைமில் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமந்தாவின் ‘தி ஃபேமிலிமேன் 2’தடையா ?   தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது. இதில் இலங்கையில் இருந்து வரும் தீவிரவாதியாக சமந்தாவை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. மனோஜ் பாஜ்பாயி சமந்தாவை பிடிக்கும் வரும் என்.ஐ.ஏ அதிகாரியாக நடிப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக சமந்தா கட்டப்பட்டிருக்கிறார்.

சமந்தாவின் ‘தி ஃபேமிலிமேன் 2’தடையா ?   தமிழக அரசு கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என‌ கூறி சீமான், வைகோ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதேபோன்று இந்த வெப் சீரிஸை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ‌எழுதியுள்ளது.

சமந்தாவின் ‘தி ஃபேமிலிமேன் 2’தடையா ?   தமிழக அரசு கடும் எதிர்ப்பு

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ’தி ஃபேமிலிமேன் 2’ வெப் சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். இந்த வெப் சீரிஸில் அது போன்றதொரு எந்த தப்பான காட்சியும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த வெப் சீரிஸுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this story