அஜித் பிறந்தநாளுக்கு ஒரு மாதம் இருக்கு… அதற்குள் ரகளையை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!

அஜித் பிறந்தநாளுக்கு ஒரு மாதம் இருக்கு… அதற்குள் ரகளையை ஆரம்பித்த  அஜித் ரசிகர்கள்!

அஜித் பிறந்தநாளுக்கு 28 நாட்கள் இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் #AdvanceHBDTHALAAjith என்ற ஹாஸ்டாக் உருவாக்கி 4 மில்லியனுக்கும் மேல் ட்வீட் செய்து சோசியல் மீடியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

அஜித் தனது 50-வது பிறந்தநாளை வரும் மே 1-ம் தேதி கொண்டாட இருக்கிறார். அன்று அஜித் ரசிகர்கள் பேனர்கள், பதிவுகள் என்று சோசியல் மீடியாவை அதிரசி செய்துவிடுவர் என்று அனைவர்க்கும் தெரியும். ஆனால் தற்போது அவரது பிறந்தநாளுக்கு 28 நாட்கள் இருக்கும் போதே AdvanceHBDTHALAAjith என்ற ஹாஷ்டாக் உருவாக்கி இன்று ஒரு நாளில் மட்டும் 4.1 மில்லியன் ட்வீட் செய்துள்ளனர். இதன் மூலம் சோசியல் மீடியா கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அஜித் பிறந்தநாளுக்கு ஒரு மாதம் இருக்கு… அதற்குள் ரகளையை ஆரம்பித்த  அஜித் ரசிகர்கள்!

விஜய் ரசிகர்களும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. அஜித் ரசிகர்கள் செய்யும் ரெக்கார்டை அடுத்து அவர்கள் முறியடிப்பார்கள். அடுத்து விஜய் ரசிகர்கள் செய்த ரெக்கார்டை அஜித் ரசிகர்கள் முறியதடிப்பார்கள். இது தற்போது ஒரு ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது.

இதற்கிடையில், அஜித் பிறந்தநாள் அன்று ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story