போனி கபூர் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்… ‘வலிமை’ புதிய அப்டேட் வெளியானது…

போனி கபூர் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்… ‘வலிமை’ புதிய அப்டேட் வெளியானது…

வலிமை படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஆன்லைன் போர்ட்டலில் போட்ட பதிவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

போனி கபூர் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்… ‘வலிமை’ புதிய அப்டேட் வெளியானது…

நடிகர் அஜீத் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘வலிமை’. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். இந்த படத்தின் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் சுமித்ரா, ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

போனி கபூர் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்… ‘வலிமை’ புதிய அப்டேட் வெளியானது…

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதி பணிகளை செய்து வருகிறார். இந்த படத்தின் 95 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது. இதற்காக அந்த நாட்டின் அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இத்துடன் படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிவுபெற்று விரைவில் தயாரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

போனி கபூர் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்… ‘வலிமை’ புதிய அப்டேட் வெளியானது…

இதற்கிடையே மே 1-ம் தேதி அஜீத் பிறந்தநாளில் ‘வலிமை’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் போனி கபூர். இதோடு வலிமை படத்தின் பிரோமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஆன்லைன் போர்ட்டலில் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படம் கடினமான அதிரடி சண்டை காட்சிகளால் நிரம்பிய குடும்ப பின்னணியை கொண்ட படமாக வலிமை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story