தியேட்டரை நம்பி பயனில்லை… ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த பிரித்விராஜ், ஃபஹத் பாசில் படங்கள்!

தியேட்டரை நம்பி பயனில்லை… ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த பிரித்விராஜ், ஃபஹத் பாசில் படங்கள்!

பிரித்விராஜ், ஃபஹத் பாசில் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளனர்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பஹத் பாசில் ‘மாலிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். நிமிஷா சஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தியேட்டரை நம்பி பயனில்லை… ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த பிரித்விராஜ், ஃபஹத் பாசில் படங்கள்!

மேலும் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், வினய் போர்ட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அரசியலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தெரிவித்துள்ளார்.

தியேட்டரை நம்பி பயனில்லை… ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த பிரித்விராஜ், ஃபஹத் பாசில் படங்கள்!

தனு பாலக் என்பவர் இயக்கத்தில் பிரித்விராஜ் கோல்டு கேஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். பிருத்விராஜ் இந்த படத்தில் போலீஸ்காரராக நடித்துள்ளார். ‘அருவி’ நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தையும் ஆண்டோ ஜோசப் தான் தயாரித்துள்ளார்.

மாலிக் மற்றும் கோல்டு கேஸ் என இரு படங்களும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தெரிவித்துள்ளார்.

Share this story