ஃபைட்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

ஃபைட்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகி இருக்கிறார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷால் சேகர் இசையமைத்து உள்ளார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவானது. 

கடந்த 25-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான பைட்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 150 கோடி ரூபாய்க்கு மேல் படத்தின் வசூல் வந்துள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி வரும் மார்ச் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகிறது

Share this story