லூசிபர் 2, எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

லூசிபர் 2, எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ்த் திரையுலகில் '2.0, பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பிரம்மாண்டப் படங்களையும், கத்தி, கோலாமாவு கோகிலா, வட சென்னை, டான் உள்ளிட்ட  பல வெற்றிப் படங்கை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது தமிழில் சந்திரமுகி, இந்தியன் 2, லால் சலாம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தமிழில் மட்டுமன்றி தெலுங்கில், கதை நம்பர் 150, குட்லக் ஜெர்ரி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளது. தற்போது லூசிபர் 2 திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் லைகா நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ளது. 

லூசிபர் 2, எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பிருத்விராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் அறிவிப்பு காணொலியை வெளியிட்டுள்ள படக்குழு, அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிவித்திருந்தது.

லூசிபர் 2, எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இந்நிலையில், எம்புரான் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Share this story