மீண்டும் இணையும் பாகுபலிக் கூட்டணி… பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!?

மீண்டும் இணையும் பாகுபலிக் கூட்டணி… பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!?

நடிகர் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது நம் அனைவர்க்கும் தெரியும். அதில் அமரேந்திர பாகுபலியாக பிரபாஸும், சிவகாமி தேவியாக ராமயா கிருஷ்ணனும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். படத்தின் வெற்றிக்கு இவர்களின் காம்போ முக்கியக் காரணம் என்றே சொல்லலாம்.

மீண்டும் இணையும் பாகுபலிக் கூட்டணி… பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!?

தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் பிரபாஸின் அக்காவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் பாகுபலிக் கூட்டணி… பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!?

இந்த மெஹா ஹிட் காம்போவைத் தன் படத்தில் நடிக்க வைப்பது படத்திற்கு பெரிய உதவியாக இருக்கும் என்று பிரஷாந்த் நீல் எண்ணுகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு கோடையில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story