ஷங்கர்- ராம் சரணின் பிரம்மாண்டக் கூட்டணியில் இணையும் சல்மான் கான்!?

ஷங்கர்- ராம் சரணின் பிரம்மாண்டக் கூட்டணியில் இணையும் சல்மான் கான்!?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க இருக்கும் படத்தில் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் டோலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷங்கர்- ராம் சரணின் பிரம்மாண்டக் கூட்டணியில் இணையும் சல்மான் கான்!?

இந்தப் படம் குறித்த தற்போதைய ஸ்பெஷல் அப்டேட் என்னவென்றால், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராம் சரண் துடிப்புமிக்க இளம் முதலமைச்சராக நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஷங்கர்- ராம் சரணின் பிரம்மாண்டக் கூட்டணியில் இணையும் சல்மான் கான்!?

ஷங்கர் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சல்மான் கான் இணைந்துள்ளார் என்றால் சொல்லவே வேண்டாம். படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு தான்.

இந்தப் படம் ஜூன் மாதம் முதல் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story