பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!

பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு டோலிவுட் திரையுலகம் அப்டேட்களால் நிரம்பி வருகிறது. ராதே ஷ்யாம், ஆர்ஆர்ஆர், நாரப்பா உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்கள் ஸ்பெஷல் அப்டேட் வெளியிட்டு யுகாதி ட்ரீட் வைத்துள்ளனர்.

பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!

தற்போது ஆச்சார்யா படத்திலிருந்தும் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டரில் ராம் சரணும்,பூஜா ஹெக்டேவும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க ரொமான்ஸ் செய்யுமாறு காணப்படுகிறது.

ஆச்சார்யா படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆச்சாரியா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

கிராமத்தின் நிலத்தை அபகரிக்க வரும் கும்பலுக்கு எதிராக போராடும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story