இறந்து போன ரசிகரின் குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுத்து உதவிய ராம்சரண்!
போன வருடம் டிசம்பர் மாதம், மெகா ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் நூர் பாய் மாரடைப்பால் உயிரிழந்தார். இறந்து போன நூர் பாய் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லுஅர்ஜுன் ராம்சரண் போன்ற முன்னணி நடிகர்களுடன் நேரடித்தொடர்பில் இருந்தவர். நூர் பாயின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் சிரஞ்சீவி தான் கொடுத்து உதவி வந்தார்
ராம்சரண் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி பல பேருக்கு உதவி வருகிறார். அதை மறுபடியும் நிரூபிக்கும் வண்ணம் இறந்து போன ரசிகரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி கொடுத்து உதவியுள்ளார்.
போன வருடம் டிசம்பர் மாதம், மெகா ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் நூர் பாய் மாரடைப்பால் உயிரிழந்தார். இறந்து போன நூர் பாய் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லுஅர்ஜுன் ராம்சரண் போன்ற முன்னணி நடிகர்களுடன் நேரடித்தொடர்பில் இருந்தவர். நூர் பாயின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் சிரஞ்சீவி தான் கொடுத்து உதவி வந்தார். நூர் பாயின் இறுதிச் சடங்கில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி உட்பட தெலுங்கு சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ராம் சரண், சமீபத்தில் தான் பெற்ற ‘தி பீப்பிள்ஸ் என்டர்டெய்னர் பார் எக்ஸலன்ஸ்” என்ற விருதை’ நூர் பாய்க்கு அர்ப்பணித்தார்.
ரசிகரின் குடும்பத்தை வாழவைக்கும் நடிகர் என அனைவரும் ராம் சரணை புகழ்ந்து வருகின்றனர்.
ராம் சரண், ராஜமௌலி இயக்கம் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் ஜூனியர் என்டி.யாரும் நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் அனைவரும் இந்த படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.