இந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைத்த அல்லு அர்ஜுன்!

இந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைத்த அல்லு அர்ஜுன்!

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தின் ட்ரைலர் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. டீசரில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு காட்சிகளும் வேற லலெவலில் இருந்தது.

இந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைத்த அல்லு அர்ஜுன்!

தற்போது புஷ்பா படத்தின் டீசர் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், புஷ்பா டீசர் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. டோலிவுட்டில் 50 மில்லியன் பார்வைகளை விரைவாகப் பெற்ற படம் புஷ்பா தான் என்று கூறப்படுகிறது.

இந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைத்த அல்லு அர்ஜுன்!

புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தனக் கடத்தல் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

புஷ்பா திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த வருடம் அதிக எதிர்பார்க்கப்படும் படங்களில் புஷ்பா மிக முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story