×

கையில் வில் அம்புடன் ராமராக மிரட்டும் ராம் சரண்! ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட்!

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரணின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று(மார்ச் 26) நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர். ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராமராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ராம் சரண் அல்லூரி ராம்ராஜு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று ராம்
 

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரணின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இன்று(மார்ச் 26) நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராமராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ராம் சரண் அல்லூரி ராம்ராஜு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரணின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் போஸ்டரில் கையில் வில் அம்புடன் ராம அவதாரமாக மிரட்டுகிறார்.

பாலிவுட் நடிகை ஆலியா பாட் ராம் சரணுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். அக்டோபர் 15-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.