×

ஒரே நேரத்தில் இருபடம். நடிகர் கமலின் புதிய திட்டம்

ஒரே நேரத்தில் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் படம் ஆகிய இரண்டையும் முடிக்க நடிகர் கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்த முடிந்த தேர்தலில் ரொம்பவே பிசியாக இருந்தார் நடிகர் கமல். கோவை தெற்கு தொகுதியில் நின்ற கமல் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கட்சிக்குள் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த தான் நடிக்க வேண்டிய படங்களில் கவனம் செலுத்த கமல் முடிவு செய்துள்ளார். தற்போது கமல்
 

ஒரே நேரத்தில் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் படம் ஆகிய இரண்டையும் முடிக்க நடிகர் கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்த முடிந்த தேர்தலில் ரொம்பவே பிசியாக இருந்தார் நடிகர் கமல். கோவை தெற்கு தொகுதியில் நின்ற கமல் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கட்சிக்குள் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த தான் நடிக்க வேண்டிய படங்களில் கவனம் செலுத்த கமல் முடிவு செய்துள்ளார்.

தற்போது கமல் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அதில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’ இந்த படத்தின் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பணிகள் தொடங்குவதில் ஷங்கருக்கும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை பேசி முடிவுக்கு கொண்டுவர கமல் முடிவு செய்துள்ளார். பிரச்சனை சுமூகமானால் விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்கின் தொடங்கும் என கூறப்படுகிறது.

அதேநேரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம், விக்ரம் படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கதையில் சில மாற்றங்களை கமல் செய்ய சொன்னதாகவும், அதை லோகேஷ் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திலும் நடிக்க கமல் நடிக்கவிருக்கிறார். இந்தியன் 2 படத்தில் கொஞ்ச காட்சிகளே எடுக்க உள்ளதால் அதை விரைவில் முடித்துவிட்டு, விக்ரம் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.