ஆரம்பிக்கலாங்களா… ‘விக்ரம்’ படத்திற்காக கமல்ஹாசன் உடன் தனி விமானத்தில் பறக்கும் லோகேஷ் கனகராஜ்!

ஆரம்பிக்கலாங்களா… ‘விக்ரம்’ படத்திற்காக கமல்ஹாசன் உடன் தனி விமானத்தில் பறக்கும் லோகேஷ் கனகராஜ்!

‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பைத் துவங்குவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி மக்கள் நீதி மய்யம் சார்பாகக் களமிறங்கினார். நேற்றுடன் தேர்தல் முடிந்துள்ளதால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விக்ரம் பட படப்பிடிப்பிற்குத் தயாராகி உள்ளார்.

ஆரம்பிக்கலாங்களா… ‘விக்ரம்’ படத்திற்காக கமல்ஹாசன் உடன் தனி விமானத்தில் பறக்கும் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் உடன் பிரைவேட் ஜெட் ஒன்றில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “ஆரம்பிக்கலாங்களா” என்று தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இன்று காலை தான் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தான் விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஆரம்பிக்கலாங்களா… ‘விக்ரம்’ படத்திற்காக கமல்ஹாசன் உடன் தனி விமானத்தில் பறக்கும் லோகேஷ் கனகராஜ்!

விக்ரம் படம் முழு அரசியல் படமாக உருவாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. விக்ரம் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரும் அதை ஓரளவுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் விக்ரம் படம் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story