×

கண்டா வரச் சொல்லுங்க… ‘கர்ணன்’ படத்தின் முதல் பாடல் அப்டேட்!

‘கர்ணன்’ படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான கர்ணன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கர்ணன் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் நாளை(18-02-2021) மாலை
 

‘கர்ணன்’ படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘கர்ணன்‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான கர்ணன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கர்ணன் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் நாளை(18-02-2021) மாலை 8 மணி முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ் கையில் வாளுடன் கம்பீரமாக நிற்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தனுஷ் கர்ணன் படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டு கிரே மேன் ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா பறந்தார். அங்கு தனுஷுக்கு நடிப்பு மற்றும் கதை குறித்த வகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.