×

கீர்த்தி சுரேஷ் வில் வித்தகராக கலக்கும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட் லக் சகி’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா திரைப்படம் வெளியாகியது. அப்படம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது. அதையடுத்து நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக போன வருட ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டனர். கொரோனாவால் இப்பட வேலைகள் முடங்கியது. அதையடுத்து முழுவீச்சில் எல்லா பணிகளுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது குட் லக் சகி படக்குழுவினர்
 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட் லக் சகி’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா திரைப்படம் வெளியாகியது. அப்படம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது.

அதையடுத்து நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக போன வருட ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டனர். கொரோனாவால் இப்பட வேலைகள் முடங்கியது. அதையடுத்து முழுவீச்சில் எல்லா பணிகளுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தற்போது குட் லக் சகி படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி இப்படம் உலகளவில் மிக பிரமாண்டமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் சகி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் துரதிருஷ்டம் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அவரது வருங்கால கணவர் திருமணத்திற்கு முன்பாக இறந்துவிடுகிறார். பின்னர் அதிலிருந்து மீண்டு தேசிய அளவில் போட்டியிட துப்பாக்கிச் சூடு போட்டிக்குத் தயாராகிறார்.

இந்தப் படத்தில் ஆதி பினிசெட்டி, ஜகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் ராம பிரபா உள்ளிட்ட நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.