×

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் ஹைதராபாத் பறந்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முன்னேறி வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் நயன்தாரா தனி விமானம் மூலம் மீண்டும் ஹைதராபாத் சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே பலமுறை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது முழு வீச்சில் படப்பிடிப்பு
 

நடிகை நயன்தாரா அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முன்னேறி வருகிறது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் நயன்தாரா தனி விமானம் மூலம் மீண்டும் ஹைதராபாத் சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே பலமுறை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தி பெரும்பாலான பகுதிகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


அண்ணாத்த திரைப்படம் கிராமப்புற பிண்ணனியில் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.