×

எனக்கே சவாலா… வேற லெவலில் டான்ஸ் ஆடிய சமந்தா… வாயடைத்த ரசிகர்கள்!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் அசத்தல் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணம் ஆன பின்னும் கூட அவரது மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறார். நடிப்பைத் தாண்டி நன்றாக நடனம் ஆடக்கூடிய நடிகையும் கூட. தற்போது சமந்தா வேற லெவலில் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் சேலஞ்சில் வெற்றி பெறுவதற்காக சமந்தா இந்த டான்ஸ் ஆடியுள்ளார்.
 

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் அசத்தல் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணம் ஆன பின்னும் கூட அவரது மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறார். நடிப்பைத் தாண்டி நன்றாக நடனம் ஆடக்கூடிய நடிகையும் கூட.

தற்போது சமந்தா வேற லெவலில் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் சேலஞ்சில் வெற்றி பெறுவதற்காக சமந்தா இந்த டான்ஸ் ஆடியுள்ளார்.

டோன்ட் ரஷ் என்ற பாடலுக்கு திரைபிரபலங்கள் நடனம் ஆடி வருவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தற்போது சமந்தாவும் இந்தப் பாடலுக்கு தனது நண்பர் அனுஷா சுவாமியுடன் நடனம் ஆடியுள்ளார்.

சமந்தாவின் இந்த நடனத்தைப் பார்த்த ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். “எனக்கு ஒரு வருடம் கொடுங்கள், நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான் வருவேன்” என்று சமந்தா அனுஷாவிடம் தெரிவித்துள்ளார்.

சமந்தா தற்போது காத்து வாக்குல ரெண்டு படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.