×

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி!

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் துவங்கியது. இப்படத்தில் சூரி, எஸ்ஜே சூர்யா, காளி வெங்கட், முனீஸ் காந்த், சிவாங்கி
 

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் துவங்கியது. இப்படத்தில் சூரி, எஸ்ஜே சூர்யா, காளி வெங்கட், முனீஸ் காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தற்போது டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சமுத்திரகனி ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அயலான் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.