சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கவுள்ளார். டாக்டர் படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

இன்று டான் படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. அதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். கோயம்புத்தூரில் அடுத்த 30 நாட்களில் படத்தின் 70 சதவீதக் காட்சிகளை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

Share this story