×

‘தளபதி 65’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் கேஜிஎஃப்பையே மிஞ்சிவிடும்… நெல்சன் திலீப்குமார் உறுதி!

தளபதி 65 படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். விஜய் தனது அடுத்த படத்தில் நெல்சன் திலீப்குமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கேஜிஎப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில்
 

தளபதி 65 படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் தனது அடுத்த படத்தில் நெல்சன் திலீப்குமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கேஜிஎப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இப்படம் குறித்து பேசியுள்ள தளபதி 65 படத்தின் ஸ்டண்ட் காட்சிகளைப் பார்த்த பிறகு ‘கே.ஜி.எஃப்’ படத்தின் சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார். கேஜிஎப்பை மிஞ்சும் சண்டைக்காட்சிகள் என்றால் படம் வேற லெவலில் மிரட்டப்போகிறது என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் இந்தப் படத்தின் புதிய கெட்டப்பில் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் அதற்கான ஒரு லுக் டெஸ்ட் நடைபெற்றுள்ளது. கூடிய விரைவில் பர்ஸ்ட் லுக் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கலாம்.