×

வெற்றி பெற்றதை அடுத்து விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற உதயநிதி!

நடிகர் மற்றும் திமுக எம்எல்ஏ உதயநிதி இன்று நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். தற்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருந்தாலும்
 

நடிகர் மற்றும் திமுக எம்எல்ஏ உதயநிதி இன்று நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.

தற்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருந்தாலும் அரசியல் மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தது உதயநிதி மீதான மதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனவாம்.

சில நிமிடங்கள் விஜயகாந்துடன் பேசிய அவர் பின்னர் வாழ்த்து பெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் உதயநிதி ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்திலும் ஒரு புதிய படத்திலும் உதயநிதி நடிக்க உள்ளார்.