×

ஆர்ஜே பாலாஜி உடன் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் வடிவேலு!

எம்டன் மகன் படத்தை இயக்கிய திருமுருகன் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர். தற்போது இந்தப் படத்தில் வடிவேலு மற்றும் ஆர்ஜே பாலாஜி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். காமெடி எண்டெர்டெயினர் படங்கள் வழங்குவதில் திருமுருகன் கைதேர்ந்தவர். எனவே இப்படமும் கண்டிப்பாக காமெடி படமாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் திருமுருகன் இயக்கிய இரண்டு படங்களிலும் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது
 

எம்டன் மகன் படத்தை இயக்கிய திருமுருகன் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர்.

தற்போது இந்தப் படத்தில் வடிவேலு மற்றும் ஆர்ஜே பாலாஜி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். காமெடி எண்டெர்டெயினர் படங்கள் வழங்குவதில் திருமுருகன் கைதேர்ந்தவர். எனவே இப்படமும் கண்டிப்பாக காமெடி படமாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் திருமுருகன் இயக்கிய இரண்டு படங்களிலும் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வடிவேலு மற்றும் ஆரஜே பாலாஜி இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்ப அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வடிவேலு, “நடிக்க திறமையும் தெம்பும் இருந்தும் வாய்ப்புகள் வருவதில்லை. வஞ்சத்தில் வீழ்ந்தேன்” என்றவாறு பேசியது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளார்.