×

விஜய்யுடன் மோதும் ரஜினி பட வில்லன்… தளபதி 65 அப்டேட்… #thalapathy 65

விஜய் 65 படத்தில் ரஜினி பட வில்லன் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 65வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். வரும் ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில்
 

விஜய் 65 படத்தில் ரஜினி பட வில்லன் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 65வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

வரும் ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கை 60 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு. படத்தின் முன்னோட்டமாக விஜய்யை வைத்து போட்டோ ஷூட் ஒன்றை எடுத்ததாகவும், அதில் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக வந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் வில்லனாக நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக வரும் நவாசுதீன் சித்திக்கை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.