×

வலிமை அப்டேட் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம்!?

அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்காத நாளில்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் பார்த்தாலும் தொடர்ந்து போனி கபூரிடம் அப்டேட் கேட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் வலிமை டீம் அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாய் இல்லை. ஆனால் வலிமை படக்குழு முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அதனால் எந்த
 

அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்காத நாளில்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் பார்த்தாலும் தொடர்ந்து போனி கபூரிடம் அப்டேட் கேட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் வலிமை டீம் அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாய் இல்லை.

ஆனால் வலிமை படக்குழு முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அதனால் எந்த நாட்டில் அந்த காட்சிகளை படமாக்க முடியும் என்று படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கடைசி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் தான் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்பதில் படக்குழு திட்டவட்டமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டால் அது படத்தின் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரத்தைப் பாதிக்கும் என்று படக்குழு கருத்துகின்றனர்.

எச் வினோத்-அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் காலா படத்தின் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.