×

‘நவரசா’ படத்தின் முன்னோட்டம்… கெத்து காட்டும் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த்!

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் உருவாகி வரும் ‘நவராசா‘ அந்தாலஜி படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘நவரசா’ என்று பெயரிடப்பட்ட இந்த சீரிஸில் 9 வெவ்வேறு கதைக்களங்கள் இடம்பெற உள்ளன. இந்த சீரிஸை கே.வி. ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ஆர் ரதிந்திரன் பிரசாத், அரவிந்த் சுவாமி என
 

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் உருவாகி வரும் ‘நவராசா‘ அந்தாலஜி படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘நவரசா’ என்று பெயரிடப்பட்ட இந்த சீரிஸில் 9 வெவ்வேறு கதைக்களங்கள் இடம்பெற உள்ளன.

இந்த சீரிஸை கே.வி. ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ஆர் ரதிந்திரன் பிரசாத், அரவிந்த் சுவாமி என மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிராகாஷ் ராஜ், ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சுவாமி, சரவணன், பிரசன்னா, விக்ராந்த், சிம்ஹா, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்கள் தளத்தில் வெளியாக இருக்கும் படங்களின் அணிவகுப்பை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் நவரசா படத்தின் முன்னோட்டமும் இடம் பெற்றிந்தது.

சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ரேவதி, பார்வதி ஆகியோர் இடம் பெற்ற காட்சிகள் அந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி வரும் அந்தாலஜி படங்கள் மக்களிடம் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

நவரசா அந்தாலஜியில் கோலிவுட்டின் முன்னணி கலைஞர்கள் அனைவரும் இணைந்துள்ளதால் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.