×

இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரமின் ஹிட் படம்!

விக்ரம் இருவேடங்களில் நடித்த ‘இருமுகன்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். நயன்தரா, நித்யா மேனன் என இரு முன்னணி நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி பயன்படுத்திய ஸ்பீட் என்ற ஊக்கமருந்து பற்றி பேசியிருந்ததாலும் இப்படம் ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியது. இப்படம் தான் விக்ரம் முதன்முதலில்
 

விக்ரம் இருவேடங்களில் நடித்த ‘இருமுகன்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். நயன்தரா, நித்யா மேனன் என இரு முன்னணி நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி பயன்படுத்திய ஸ்பீட் என்ற ஊக்கமருந்து பற்றி பேசியிருந்ததாலும் இப்படம் ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியது. இப்படம் தான் விக்ரம் முதன்முதலில் இரட்டை வேடங்களில் நடித்த படம். அதிலும் விக்ரம் வில்லனாகவும் மிரட்டியிருந்தார்.

தற்போது இருமுகன் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதை இயக்குனர் ஆனந்த் சங்கரே இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். ரஸ்சியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.