×

இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம்… தேர்தலுக்குப் பிறகு ரஷ்யா! ‘தளபதி’ 65 பட ஸ்பெஷல் அப்டேட்!

தளபதி 65 படத்தின் பூஜை இன்று சன் டிவி அலுவலகத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் தனது 65-வது படத்தில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அவர் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போதைய அப்டேட்
 

தளபதி 65 படத்தின் பூஜை இன்று சன் டிவி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

நடிகர் விஜய் தனது 65-வது படத்தில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அவர் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போதைய அப்டேட் என்னவென்றால், இன்று தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு சன் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்குகிறது. அதையடுத்து இரண்டு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து தேர்தலுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்த விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.