கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் கூட்டணியின் ‘அன்பிற்கினியாள்’… ட்ரைலர் அப்டேட்!

கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் கூட்டணியின் ‘அன்பிற்கினியாள்’… ட்ரைலர் அப்டேட்!

கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அன்பிற்கினியாள் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ‘ஹெலன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது.

கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் கூட்டணியின் ‘அன்பிற்கினியாள்’… ட்ரைலர் அப்டேட்!

நடிகர் அருண் பாண்டியன் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். மேலும் தனது மகள் கீர்த்தி பாண்டியனை அதில் கதாநாயகியாக நடிக்க வைத்து வருகிறார். இந்தப் படத்தில் அருண் பாண்டியனும் நடிக்கிறார். 11 வருடங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் அன்னா பென் நடிப்பிற்கு இணையான நடிப்பைக் கொடுப்பாரா என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் கூட்டணியின் ‘அன்பிற்கினியாள்’… ட்ரைலர் அப்டேட்!

Share this story