அண்ணாத்த படத்தில் இந்த நடிகரா ?… ரஜினியை பார்த்த ஆச்சர்யப்பட்டதாக என கருத்து…

அண்ணாத்த படத்தில் இந்த நடிகரா ?… ரஜினியை பார்த்த ஆச்சர்யப்பட்டதாக என கருத்து…

‘அண்ணாத்த’ படத்தில் சுல்தான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் நடித்துள்ளார்.

அண்ணாத்த படத்தில் இந்த நடிகரா ?… ரஜினியை பார்த்த ஆச்சர்யப்பட்டதாக என கருத்து…

நடிகர் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அண்ணாத்த படத்தில் இந்த நடிகரா ?… ரஜினியை பார்த்த ஆச்சர்யப்பட்டதாக என கருத்து…

சென்னையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் ஐதராபாத்தில் தொடங்கியது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கும் இந்த ஷூட்டிங்கில் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்ட ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அர்ஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

அண்ணாத்த படத்தில் இந்த நடிகரா ?… ரஜினியை பார்த்த ஆச்சர்யப்பட்டதாக என கருத்து…

இந்த படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ள அர்ஜய், ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷூட்டிங்கின்போது அவரது அபார நடிப்பை பார்த்து வியந்துபோனேன். இந்த வயதிலும் துடிப்போடும், நகைச்சுவை தன்மையுடனும் இருக்கிறார். ஒரு நீளமான வசனதைகூட மிக எளிமையாக பேசி நடித்து விடுகிறார். அவரின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

Share this story