ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் அங்கீகாரம் பெற்ற அசுரன்!

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் அங்கீகாரம் பெற்ற அசுரன்!

தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் ஜப்பானில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் நடித்த ஒவ்வொருவரும் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை இணைத்துக் கொண்டனர். தனுஷின் நடிப்பைப் பார்த்து வியக்கதோர் கிடையாது என்றே சொல்லலாம். படத்தில் சாதிய வேறுபாடுகள், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை என சமூக அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் எடுத்துக் காட்டியிருந்தார் வெற்றிமாறன்.

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் அங்கீகாரம் பெற்ற அசுரன்!

அசுரன் மக்களின் பாராட்டு மழையோடு பல விருதுகளை வாரிக் குவித்தது. பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. தற்போது அசுரன் திரைப்படம் ஜப்பானில் நடைபெறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசுரன் படம் இந்தத் திரைப்பட விழாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Share this story